எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத குருதி ஆட்டம்… இயக்குனரின் ‘நன்றியும் மன்னிப்பும்’ பதிவு!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸானது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீகணேஷ் இயக்க, ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் சில ஆண்டுகளுக்கே முன்பே முடிந்துவிட்டாலும் பல பிரச்சனைகளில் சிக்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸானது. இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய 8 தோட்டாக்கள் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. அதுபோல வசூலிலும் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் ஸ்ரீகணேஷ் தன்னுடைய முகநூல் பதிவில் “ நன்றி & மன்னிப்பு. எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. அந்த ஆதரவுக்கு இணையான வார்த்தைகள் என்னிடம் இல்லை. படத்தில் இருந்த குறைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கடினமாக உழைத்து அடுத்த படத்தை இன்னும் சிறந்ததாகக் கொடுப்பேன். அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படத்தை திரையரங்கில் பார்க்காமல் விட்டவர்களுக்காக ஆஹா ஓடிடியில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல்” என அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்