மின்சாரம் வாங்க, விற்க தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடை!
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (12:15 IST)
வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கும் மின்சாரத்தை வெளிமாநிலங்களில் விற்பதற்கும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த 13 மாநிலங்களும் மின் பகிர்மான வகையில் ரூபாய் 5500 ரூபாய் பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் இதனை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நேற்று இரவு முதல் மின்சாரத்தை வாங்கவும் விற்கவும் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது
இந்த தடை காரணமாக மாநிலங்களுக்கு இடையே மின் பகிர்வு நடைபெறாது என்பதால் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது