மதுபானக்கடை பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:21 IST)
மதுபானக்கடை படத்தை இயக்கிய இயக்குனர் கமலக்கண்ணனின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு மதுபானக்கடை திரைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் அந்த இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிபிராஜ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் இயக்கும் குரங்கு பெடல் என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராசி அழகப்பனின் சிறுகதையை தழுவி உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்