சுஜா வருணி வீட்டில் தவழ்ந்து விளையாடிய குழந்தை கிருஷ்ணன் - கியூட் ஸ்டில்ஸ்!

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (14:31 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு தனது செல்ல மகனை கிருஷ்ணன் போல் அலங்கரித்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.


சுஜா வருணியின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்