மாஸ்டர் கொஞ்சம் நகருங்க.. முன்னால் வந்த ராக்கி பாய்! – சாதனை படைத்த கேஜிஎஃப்2 டீசர்!

வெள்ளி, 8 ஜனவரி 2021 (14:59 IST)
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கேஜிஎஃப்2 படத்தின் டீசர் புதிய சாதனையை படைத்துள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎஃப். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ள நிலையில் டீசர் வெளியான 10 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்தியாவில் 10 மணி நேரத்திற்குள் அதிக லைக்குகள் பெற்ற டீசராக கேஜிஎஃப் 2 சாதனை படைத்துள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் நடித்து வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானபோது 10 மணி நேரத்தில் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்றது சாதனையாக இருந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டரை பின்னுக்கு தள்ளி முன்னால் வந்து சாதனை படைத்துள்ளார் கேஜிஎஃப் ராக்கி பாய்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்