ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் அது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று. என் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய குருவான ப்ரியதர்ஷனுக்கும் நன்றி. அவர்தான் சினிமாவில் என் தொடக்கப்புள்ளிக்கான காரணம். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.