இந்தி திணிப்புக்கு எதிரான படம் தான் ‘ரகு தாத்தா’.. இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ்..!

Siva

ஞாயிறு, 21 ஜூலை 2024 (14:06 IST)
கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரகு தாத்தா’என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் ர‘ரகு தாத்தா’ திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு மட்டுமின்றி எல்லா திணிப்புக்கும் எதிரான படம் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ரகு தாத்தா படத்தின் கதையைக் கேட்ட போது எனக்கு சரியாக வருமா என யோசித்தேன். ஆனால், இயக்குநர் எனது நடிப்பில் உறுதியாக இருந்தார். நான் நடித்த  இந்தி   படமான பேபி ஜான் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் நேரத்தில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான ரகு தாத்தா படத்தில் நடித்திருப்பது பற்றி பலரும் கேட்டனர்.

இந்தப் படம் பெண்கள் மீதான திணிப்பை பேசுகிறது. அதில், இயக்குனர்  இந்தியை கையில் எடுத்திருக்கிறார். நல்ல நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” என கீர்த்தி சுரேஷ் கூறினார்.

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய்,  உள்பட பலர் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.  

50 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்