கேரளாவில் மீண்டும் பாய்ந்த ”கத்தி”

ஞாயிறு, 16 ஜூன் 2019 (16:00 IST)
பிரபல நடிகர் விஜயின் பிறந்தநாள், ஜூன் 22 ஆம் தேதி வரவிருப்பதை ஒட்டி, கேரளாவில் கத்தி திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது

கேரளாவில் நடிகர் விஜய்க்கு பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர். இயக்குனர் சித்திக், ஃபாசில் ஆகிய மலையாள இயக்குனர்களின் படங்களில் விஜய் நடிக்க தொடங்கியதிலிருந்து, கேரளாவிலும் விஜய் திரைப்படங்கள் வெளியாக தொடங்கின.

இந்நிலையில் வருகிற ஜுன் 22 ஆம் தேதி, நடிகர் விஜயின் பிறந்தநாள் வரவிருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக கேரளாவில் பாலக்காட்டில் ஒரு திரையரங்கில் கத்தி திரைப்படத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர்.

அந்த திரையரங்கில் கத்தி திரைப்படத்தை பார்த்துகொண்டிருந்த ஒரு விஜய் ரசிகர், மற்ற ரசிகர்களோடு உற்சாகத்துடன் கத்தி திரைப்படத்தை பார்த்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம்,விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பல தரபட்ட ரசிகர்களும் ரசித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.   

Son Of Kerala #ThalapathyVijay #ThalapathyDayCommonCP https://t.co/UJfrFgdIaL pic.twitter.com/g43KZ85GbC

— UnBeatable Thalapathy Fanatics (@Utfanatics2) June 16, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்