காத்து வாக்குல ரெண்டு காதல்… அடுத்த சிங்கிள் அப்டேட்!

புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:05 IST)
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இப்போது புதுச்சேரியில் இறுதிகட்ட படப்பிடிப்பை படத்தின் மூன்று முக்கிய கதாபாத்திரங்களையும் வைத்து தொடங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.  இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் அடுத்த மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்