ஷோ செம ஹிட்... குத்தாட்டம் போட்ட டிடி - வீடியோ!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (11:34 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.
 
எவ்வளவு பெரிய உச்ச நடிகர், நடிகையாக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி. அந்தவகையில் அண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நேர்காணல் செய்தார். நெற்றிக்கண் படத்தின் ப்ரமோஷன் ஆன அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா காதல், நிச்சயதார்த்தம் , திருமணம் என பல தனிப்பட்ட விஷயங்களை மனம் திறந்து பேசினார். 
அந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் அதை ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ள டிடி , ஷோவும் நல்லா வந்துச்சு , இந்த ரீலும் நல்லா வந்துச்சு, அதனால இப்போ இது இன்ஸ்டாவுக்கு வந்துச்சு என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்