நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், கருணாஸ் துணைத்தலைவராகவும் பதவியில் இருந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸ் திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ மற்றும் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களில் நடித்துள்ள கருணாஸ், தனுஷின் அடுத்த படமான ‘வடசென்னை’ படத்திலும் நடித்து வருகிறார். இதனால் பணி சுமை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.