தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கருடன்’: சூரி, சசிகுமார் கேரக்டர்களில் யார்?

Mahendran

புதன், 2 அக்டோபர் 2024 (17:56 IST)
சூரி மற்றும் சசிகுமார் நடித்த 'கருடன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்றதோடு, 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் OTT தளத்திலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில், 'கருடன்' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கருடன் படத்தின் தெலுங்கு படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நாரா ரோகித் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இதில் சூரி மற்றும் சசிகுமார் நடித்த கதாபாத்திரங்களில் யார் நடிப்பார்கள் என்பதைக் குறித்து படக்குழுவினர் இதுவரை சஸ்பென்ஸில் வைத்துள்ளனர்.
 
மேலும், ஆனந்தி, அதிதி சங்கர், திவ்யா பிள்ளை ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருவதாகவும், நந்தி படத்தை இயக்கிய விஜய் கனகமெடலா இந்த படத்தை இயக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழில் போல் தெலுங்கிலும் 'கருடன்' திரைப்படம் பெரும் வெற்றி பெறுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்