தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி பாரதிராஜா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பாரதிராஜா அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இருப்பினும், சங்க உறுப்பினர்கள் சிலர் பாராதிராஜாவை தலைமை பொறுப்பை ஏற்கும் படி கோரிக்கை வைத்தனஎர். இந்நிலையில், கரு பழனியப்பன் இது குறித்து பேசியதாவது, இயக்குநர் சங்கதிற்குள் சென்றால் ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன, அது சங்கமா? இல்லை கேளிக்கை விடுதியா? என்பதே தெரியவில்லை.
பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. ஆனால், அதற்காக அவரைக கடவுளாக்க வேண்டாம். அவரும் அதை விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். மற்றவரகளை போல் அவரும் தேர்தலில் நின்று ஜெயித்து வரட்டும் அதுதான் ஜனநாயகம் என விமர்சித்து பேசியுள்ளார்.