கேம்சேஞ்சர் கதைக்கு ஷங்கர்தான் சரியான இயக்குனர்… கார்த்திக் சுப்பராஜ் பதில்!

வியாழன், 9 நவம்பர் 2023 (09:13 IST)
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.'

இந்த படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுத, திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார் ஷங்கர். இந்நிலையில் கதைப் பற்றி பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ் “நான் முழுக்க முழுக்க ஒரு அரசியல் சார்ந்த கதையை எழுதினேன். என்னுடைய உதவி இயக்குனர்கள் இந்த கதைக்கு ஷங்கர் சார் போன்ற ஒரு பெரிய இயக்குனரும், ஒரு ஸ்டார் நடிகரும்தான் சரியாக இருப்பார்கள் எனக் கூறினர்.

எனவே நான் ஷங்கர் சாரிடம் கதையைக் கூறினார். அவருக்குப் பிடித்துப் போகவே, அவர் விரிவான திரைக்கதை அமைத்து அவர் பாணியில் இயக்கி வருகிறார். இப்போது நான் அந்த கதை எப்படி உருவாகி வந்துள்ளது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்