இந்தியன் 2 பாகங்களாக ரிலீஸ் ஆகும் என தகவலை சொன்ன கமல்!

புதன், 8 நவம்பர் 2023 (07:28 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

இதையடுத்து விஜயவாடாவில் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது கமல்ஹாசன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியன் திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என கமல்ஹாசன் தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்