காற்று வெளியிடைக்காக கஷ்டப்பட்டேன் - கார்த்தி

வியாழன், 2 மார்ச் 2017 (17:55 IST)
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டதாக கார்த்தி கூறியுள்ளார்.



இந்தப் படத்தில் கார்த்தி போர்ப்படை விமானியாக நடித்துள்ளார். இதற்காக விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர்ஸை சந்தித்து அவர்களின் மேனரிசங்களை ஸ்டடி செய்துள்ளார்.

மேலும், ராணுவ விமானியாக தோற்றம் வருவதற்காக  ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறிப்பிட்ட டயட்டை பின்பற்றி உடல் எடையையும் குறைத்துள்ளார்.

ஜிம்மில் எவ்வளவு நேரம் இருக்கிறேnம் என்பதல்ல, என்ன மாதிரியான உணவை எடுப்பது என்பதுதான் முக்கியம். சரியான உணவை எடுத்துக் கொண்டதால் எப்போதையும்விட பிட்டாகவும், ப்ரீயாகவும் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

பார்த்தாலே தெரியுது பாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்