எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளத நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் பட டிரைலர் வரும் மார்ச் 24 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்த நிலையில் தற்போதுஇப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அத்துடன் நீண்டநாட்களாக ரசிகர்கள் இந்த அப்டேட்டிற்கு எதிர்பார்த்து வந்த நிலையில் இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.