இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற முடியாது… ஜெயம் ரவி டிவிட்டுக்கு கார்த்தி பதில்!

வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:59 IST)
நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அது சம்மந்தமாக டிவிட் செய்திருந்தார்.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாகவும் ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். அந்த டிவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கார்த்தி ‘இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் சோழ நாட்டிற்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கே வேலைகளை முடித்துவிட்டு தென்மண்டலம் வந்தடைவோம்- வந்தியத் தேவன்’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்