கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.