அரசியலுக்கு வருகிறாரா நடிகர் கார்த்தி: பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

புதன், 11 மே 2022 (19:40 IST)
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் கார்த்தி: பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் புதிது இல்லை என்ற நிலையில் தற்போது கார்த்தி ரசிகர்கள் கார்த்தியை அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரீதியில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் போஸ்டர்களை அடித்து உள்ளனர் 
 
அதில் எம்ஜிஆர் கருணாநிதியுடன் கார்த்தி இருப்பது போன்ற புகைப்படமும் இரண்டு முதல் அமைச்சர்கள் வழியில் கார்த்தி ஆட்சி செய்வார் என்று சுட்டிக் காட்டும் வகையிலும் போஸ்டர்கள் உள்ளது 
 
மதுரையில் அஜித் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கார்த்தியின் ரசிகர்களும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்