கபில் தேவ்வுடன் பயிற்சி எடுத்த “கபில் தேவ்”..

Arun Prasath

புதன், 8 ஜனவரி 2020 (20:19 IST)
கபில் தேவ் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், கபில் தேவுடன் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றது. இதை அடிப்படையாக வைத்து “83: என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. கபில் தேவ்வின் உண்மைக் கதையான இதில், கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துவருகிறார்.

இந்நிலையில் கபில் தேவ்வின் பிறந்த நாளான இன்று, தர்மசாலாவில் படத்திற்காக போடப்பட்ட செட்டில் கபில் தேவ்வும் ரன்வீர் சிங்கும் சந்தித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ரன்வீர் சிங், கப்ல் தேவ்வுடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்களை ரன்வீர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அப்பக்கத்தில், ”நீங்கள் ஒரு லெஜண்ட், எங்களுக்கு வழி காட்டியமைக்கு நன்றி. நீங்கள் எங்களை பெருமை கொள்ள வைத்துள்ளீர்கள். தற்போது இது எங்கள் முறை” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்