காந்தாரா சேப்டர் 1 படத்துக்காக 600 கார்பெண்டர்கள் சேர்ந்து உருவாக்கும் பிரம்மாண்ட செட்!

vinoth

வியாழன், 2 மே 2024 (16:38 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலம் குந்தாபுராவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டுக்காக 600 தச்சர்கள் இணைந்து பணியாற்றுகிறார்களாம். படம் வெளியாகும் போது இந்த செட் பேசுபொருளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்