இந்த ஆண்டு தொடக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தியா. தியா என்ற பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரு இளைஞர்கள் மற்றும் அவர்களால் தியா வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் இதுவே அந்த படத்தின் கதை. ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.