வெறித்தனமான "காஞ்சனா 3" பாடல் டீசர்! லாரன்ஸின் புயல்வேக நடனம் இதோ!

புதன், 3 ஏப்ரல் 2019 (13:19 IST)
திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
 
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார். 
 
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 
முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகமாக  காஞ்சனா 3 உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா,ஓவியா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா,  ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின்  ட்ரைலர் மாஸ் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இணையத்தில் காஞ்சனா 3 படத்தின் பாடல் வீடியோ டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. "நண்பனுக்கு கோயில கட்டு" என்னும் இப்பாடலை  சரவெடி சரண் எழுதி பாடியுள்ளார். லாரன்ஸ் ஸ்டைலாக புயல்வேகத்தில் நடனமாடும் இப்பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்