டாடா படத்துக்குக் கிடைத்த வரவேற்பு… கவினுக்கு வாய்ப்புக் கொடுக்கும் கமல்ஹாசன்!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து இப்போது கவின் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கவின் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்