கமல்ஹாசன் –மணிரத்னம் இணையும் தக் லைஃப் ஷூட்டிங் எப்போது?

vinoth

செவ்வாய், 16 ஜனவரி 2024 (07:24 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படத்தின் செட் அமைக்கும் பணிகள் முடிவடையாததால் ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்