மருத்துவமனையில் இருந்து நேரடியாக பிக்பாஸ் செட்டுக்கு செல்லும் கமல்ஹாசன்!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:24 IST)
நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து குணமாகி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்.

இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆகும் கமல்ஹாசன் நேரடியாக பிக்பாஸ் செட்டுக்கே செல்ல உள்ளாராம். அங்கிருந்து நாளை அவர் தோன்றும் பிக்பாஸ் எபிசோட் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்