சிவாஜி மணிமண்டப விழா குறித்து கமலின் டுவீட்

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (23:16 IST)
இன்று நடைபெற்ற சிவாஜி கணேசன் மணிமண்டபம் விழாவில் அரசியலில் வெற்றி பெறுவது எப்படி என்ற ரகசியம் கமலுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம் என்று கூறிய ரஜினி, இன்னொன்றையும் அழுத்தமாக கூறினார்.



 
 
அது என்னவெனில் அரசியலில் வெற்றி பெற சினிமா, பெயர், புகழ், பணம், செல்வாக்கு மட்டும் போதாது, அதுக்கு மேல ஒண்ணு வேணும் என்று. அந்த ஒன்று கமலிடம் இருக்கின்றதா? என்பதை மறைமுகமாக கமல் கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
டுவிட்டரில் ஒருசிலர் கொடுக்கும் ஆதரவை நம்பி கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதையே ரஜினி மறைமுகமாக கமலுக்கு தெரிவிக்கும் செய்தி என்று ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
கமல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்று கூறினாலும் இந்தியன் 2 உள்பட மீண்டும் திரைப்படங்களில் பிசியாகவுள்ளதால் அவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், ஒருவேளை அவருக்கு முன்பாக ரஜினி வெளியிடுவாரா? என்பதை ஆவலுடன் தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று நடந்த விழா குறித்து பதிவு செய்த டுவிட்டில், 'செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு' என்று கூறியுள்ளார். அவர் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்