ஸ்ருதியின் காதலருடன்(?) கமல்

வெள்ளி, 3 மார்ச் 2017 (15:19 IST)
இங்கிலாந்தில் நடந்து வரும் பிரிட்டன் - இந்தியா கலாச்சார விழாவில் பங்கேற்க சென்ற கமல், ஸ்ருதியின் காதலர் என்று சொல்லப்படும் நாடக நடிகர் மைக்கேல் கார்செலை சந்தித்தது பல்வேறு யூகங்களுக்கு இடம்கொடுத்துள்ளது.


 
 
இங்கிலாந்து நாடக நடிகர் மைக்கேல் கார்செலும் ஸ்ருதியும் காதலிப்பதாக வதந்தி உள்ளது. சமீபத்தில் மும்பை வந்த கார்செலை விமான நிலையத்தில் சென்று வரவேற்று, மூன்று தினங்கள் அவருடன் இருந்து விமான நிலையத்தில் வழியனுப்பியதுவரை அனைத்தையும் செய்தது ஸ்ருதி. இதன் தொடர்ச்சியாக, இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாயின.
 
ஆனால், ஸ்ருதியின் இசைக்குழு லண்டனில் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சி குறித்துப் பேசவே கார்செல் மும்பை வந்தார், அவர்களுக்குள் இருப்பது நட்புதான் என்று ஸ்ருதி தரப்பு வதந்தியை மறுத்தது.
 
இந்நிலையில் லண்டன் சென்ற கமல் மைக்கேல் கார்செலை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம், ஸ்ருதியின் காதலுக்கு கமல் பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்ற வதந்தியை புதிதாக கிளப்பியிருக்கிறது.
 
ஸ்ருதியும் வதந்தியும் பிரிக்க முடியாதவை. அவரே இந்த விஷயத்தில் விளக்கம் சொன்னால்தான் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்