நடிகர் விஜய்க்கு உதவும் கமல்ஹாசன்.... பிறந்த நாளில் 2 அப்டேட் ...ரசிகர்கள் குஷி.

வியாழன், 8 ஜூன் 2023 (19:25 IST)
விஜய் பிறந்த நாளில் ஒரே நாளில் 2  படங்களின் அப்டேட்களை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் லியோ.  இப்படத்தின் ஷூட்டிங்  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 49 வது பிறந்த நாள் என்பதால் ‘லியோ’ பட புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. இந்த வீடியோவுக்கு கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், இப்படத்திற்குப் பின், நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68 ‘வது படத்தில்  நடிக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதனால், விஜய் பிறந்த நாளில், விஜய் 68 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்திற்கு சிஎஸ்கே என தலைப்பு வைக்க வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் பிறந்த நாளில் ஒரே நாளில் 2 அப்டேட்களை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்