கலைமாமணி விருதுகள் அறிவிப்பில் குழப்பம்… வாட்ஸ் ஆப்பால் வந்த வினை!

சனி, 20 பிப்ரவரி 2021 (07:58 IST)
தமிழக அரசின் கலைமாமணி விருது பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதிப்பவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் கலைமாமணி விருதுகளை அறிவிக்கும். இதற்கான பட்டியலை இயல் இசை நாடக மன்றம்தான் அரசுக்கு பரிந்துரைக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் என்ற ஒன்று ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியானது. ஆனால் அந்த பட்டியலை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையாம்.
அரசு வெளியிடும் முன்னரே யாரோ சிலர் அதை வாட்ஸ் ஆப்பில் பரப்ப, செய்தி ஊடகம் வரை செல்ல அது இப்போது இணையத்திலும் வைரலாகியுள்ளது. இது தெரியாமல் பட்டியலில் உள்ள கலைஞர்களுக்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்