காலால் கையை தொட்டு கெத்து பண்ணும் அதிதி ராவ் ஹைதாரி - இப்படியும் ஒரு ஒர்க்அவுட்டா...!

சனி, 9 மே 2020 (13:43 IST)
மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும்  மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதி சமூகலைத்தளங்களில் எப்போதும் ஆக்தீவாகி இருப்பார்.

நடிப்பது மட்டுமின்றி அற்புதமாக பாடல் படுவது,  நடனமாடுவது என அத்தனை கலைகளிலும் புகுந்து விடையாடுவார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையை தூக்கி நின்று கொண்டு காலால் உள்ளங்கையை தொடும் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சியை அசால்டாக செய்த வீடியோ வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது அந்த வீடியோ லிங்க்..
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Kicking those blues away while trying to not fall flat on my face

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்