கஜோலை ஏமாற்றிய தனுஷ்…

செவ்வாய், 27 ஜூன் 2017 (11:29 IST)
தனுஷ் தன்னை ஏமாற்றிவிட்டார்’ என பாலிவுட் நடிகை கஜோல் கூறியுள்ளார்.


 


செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க, அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கஜோல் தனுஷுடன் மோதும் கேரக்டரில் நடித்துள்ளார். அவர் பெயர் வசுந்தரா.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கஜோல், “தெரியாத மொழியில் நடிப்பதற்கு நெர்வஸாக இருந்தது. என் வீட்டுக்கு வந்து தனுஷும், செளந்தர்யாவும் கதை சொன்னபோது, தமிழில் கொஞ்ச டயலாக் தான் இருக்கும் என்றார்கள். ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கிலேயே ரெண்டு ஸீன்களில் மிகப்பெரிய தமிழ் டயலாக்கை கொடுத்து பேசவிட்டனர். ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்தபிறகும், மறுநாள் பேசவேண்டிய டயலாக் பேப்பரை வாங்கிக் கொள்வேன். அன்று இரவு என் ரூமில் உதவி இயக்குநரிடம் பேசிக் காண்பிப்பேன். மறுபடியும் ஸ்கூலுக்குப் போனது போல் தோன்றியது. என் பயத்தை உடைத்து, தமிழில் என்னை டயலாக் பேச வைத்ததற்கு, தனுஷுக்கு நன்றி” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்