கொரோனா லாக்டவுனில் நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்ட காஜல் அகர்வால்!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:45 IST)
தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது உறவினருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் நான் மகான் அல்ல, துப்பாக்கி ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார் காஜல் அகர்வால். அதே போல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 35 வயதாகும் அவர் இப்போது தனது உறவினரும் தொழிலதிபருமான கௌதம் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. லாக்டவுன் என்பதால் அதில் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்