சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் கபாலி பாடல்களை ஜுன் 12 -ஆம் தேதி வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவில், ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் ரஜினி ஜுன் 12 -ஆம் தேதிக்கு முன் நாடு திரும்ப மாட்டார் என்பதால் கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தாமல் நேரடியாக பாடல் சிடியை கடைகளில் விற்பனை செய்வது என்று தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக ஒருசாரர் கூறுகின்றனர்.