மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை! டிரைலர் ரிலீஸ் தேதி

புதன், 8 மார்ச் 2017 (05:54 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.




இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே இணையதளங்களில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் நாளை அதாவது மார்ச் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இசையமைப்பாலர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி, ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்