காஷ்மோராவை வெளியிடும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (13:14 IST)
சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்துப் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். தீபாவளிக்கு இவர்கள் வெளியிடும் படம், கார்த்தியின் காஷ்மோரா.


 
 
கார்த்தி மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரு நாயகிகள். கோகுல் படத்தை இயக்கியுள்ளார். பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்தது.
 
அவர்களிடமிருந்து படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை தேனாண்டாள் கைப்பற்றியுள்ளது. 
 
காஷ்மோராவின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. கார்த்தி தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார். இன்னும் சில தினங்களில் படத்தின் மொத்த டப்பிங் பணிகளும் முடிவடைய உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்