ஜோதிகாவின் புதிய படம் - பிரம்மா இயக்குகிறார்

சனி, 9 ஜூலை 2016 (14:40 IST)
திருமணமான பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடித்தார்.  படம் ஹிட். 


 

 
சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று படத்தின் வெற்றியின் போது அவர் கூறியிருந்தார். அதற்காக கதைகளும் கேட்டு வந்தார். தற்போது அடுத்த படம் உறுதியாகியுள்ளது.
 
குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மாவின் புதிய படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். தற்போது நடிகர், நடிகைகளுக்கு 20 நாள் ஒத்திகை நடந்து வருகிறது. அது முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது. 
 
தாய்ப் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை பிரம்மா இயக்குகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்