சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பட ரிலீஸுக்கு முன்னர் மிக பெரிய அளவில் படக்குழுவினர் படம் பற்றி பேசி பில்டப் கொடுத்திருந்தனர்.
இந்த படம் இந்த குறித்து அப்போது பேசியிருந்த ஜோதிகா கங்குவா' படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக கூறியிருந்தார். அதேக் கருத்தை அவர் இப்போது மீண்டும் பேசியுள்ளார். அதில் “வெற்றிகரமான படங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. என் கணவரின் படங்கள் நல்ல படமாக இருந்தபோதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த படத்தில் (கங்குவா) நிறைய நல்ல முயற்சிகள் இருந்தன. ஆனால் பிற மோசமான படங்களை விட அந்த படம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்கள் என்னைக் கடுமையாக பாதித்தது. ஊடகங்கள் நியாயமானதாக இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.