RRR படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் பிரபல ஓடிடியில்? எப்போது? வெளியான தகவல்!

வியாழன், 12 மே 2022 (08:57 IST)
RRR திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி ரிலீஸாகி இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது.

பாகுபலிக்குப் பின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி  வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி திரையரங்குகள் மூலமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி 40 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி 5 ஓடிடியில் வரும் மே 20 ஆம் தேதி முதல் தென்னிந்திய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்