ஜூனியர் என் டி ஆர் & பிரசாந்த் நீல் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

திங்கள், 9 அக்டோபர் 2023 (07:30 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின்  30 ஆவது படமான இதற்கு ‘தேவரா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு பிறகு ஜூனியர் என் டி ஆர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் NTR 31 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் X தளத்தில் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்