ஜுங்கா படத்தின் விஜய் சேதுபதியின் வைரல் புகைப்படம்

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:58 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனது எதார்தமான நடிப்பில், வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இந்நிலையில் இவர் தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் 'ஜுங்கா' என்ற படத்தில் நடித்து  வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது. அவர் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட  இருக்கிறது.

 
இப்படத்தின் சமீபத்தில் விஜய் சேதுபதியின் பெண் வேடமிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில்  அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளிக்கிறார்.
 
இந்தப் படத்தில், ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி நடிக்க, பாரிஸில் பிறந்து வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்