விதி மீறும் பொதுமக்கள் ; கையெடுத்து கும்பிடும் இன்ஸ்பெக்டர் - வைரல் புகைப்படம்

புதன், 11 அக்டோபர் 2017 (14:49 IST)
சாலை விதியை மீறும் பொதுமக்களை பார்த்து ஒரு இன்ஸ்பெக்டர் கையெடுத்து கும்பிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஐதராபாத் அருகேயுள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மடகாசிரா பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சுகுப் குமார். இவர், சமீபத்தில் அந்த பகுதியில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காவல் நிலையத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக ஹனுமந்த்ரையா என்பவது தனது மோட்டார் சைக்கிளில் தனது 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வந்தார். 
 
இவர் இதுபோல் பல முறை அந்தப் குதியில் வந்து இன்ஸ்பெக்டர் சுகுப் குமாரிடம் அபராதம் செலுத்தியுள்ளார். ஆனாலும், அவர் தொடர்ந்து அதை பின்பற்றி வந்தார்.
 
அவரைப் பார்த்ததும், இன்ஸ்பெக்டர் சுகுப்குமார் தனது இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடு போட்டார். இது ஹனுமந்த்ரையாவிற்கு வியப்பை ஏற்படுத்தியது.  
 
இன்ஸ்பெக்டர் கை கூப்பி கும்பிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்