இந்த நிலையில் இந்த படத்திற்காக முதன்முதலாக ஜோதிகா ரில ரிஸ்க்குகளை எடுத்துள்ளார். இந்த படத்தில் புல்லட் ஓட்டுவது போன்ற ஒரு காட்சிக்காக நிஜமாகவே சூர்யாவிடமும், பயிற்சியாளர் ஒருவரிடமும் புல்லட் ஓட்ட ஜோதிகா கற்று கொண்டார்
அதேபோல் ஜோதிகாவின் இத்தனை வருடன் சினிமா வாழ்க்கையில் அவர் இதுவரை ஒரு படத்தில் கூட டப்பிங் செய்தது இல்லை. ஆனால் குரல் கொடுக்கும் இந்த படத்தில் மகளிருக்காக ஜோதிகா டப்பிங் பேசினால் இயல்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரம்மா கருதியதால் அவரே டப்பிங் பேசினார். சுமார் 12 நாட்கள் அவர் டப்பிங் செய்ய காலம் எடுத்து கொண்டதாகவும், இந்த 12 நாட்களிலும் இயக்குனர் கூடவே இருந்து ஜோதிகாவுக்கு உச்சரிப்பை சரியாக கற்று கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.