சூர்யா படத்தை பார்க்க ஆசைப்படும் ஜாண்டி ரோட்ஸ்… இதுதான் காரணமா?

வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:09 IST)
சூர்யா தயாரித்துள்ள ‘ஓ மை டாக்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்திருக்கும் படமான ஓ மை டாக் வரும் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ளது. குழந்தைகளை கவரும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ”இந்த படத்தைப் பார்க்க ஒரு வளர்ப்புப் பிராணி ஆர்வலனாக நான் ஆசைப்படுகிறேன்” என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் டிவீட் செய்திருந்தார். அந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ள சூர்யா “சார் நான் உங்கள் ரசிகன். கண்டிப்பாக இந்த படம் உங்கள் மகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” எனக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்