விஜய்யின் அடுத்த படத்தின் நாயகியாகும் ஜான்வி கபூர்

திங்கள், 16 டிசம்பர் 2019 (21:10 IST)
போனிகபூர்-ஸ்ரீ தேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
அஜித் நடிக்கும் 'வலிமை’ படத்தில் முதலில் ஜான்வி கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்ற கேரக்டர் அந்த படத்தில் இல்லை என்பதால் இயக்குனர் எச்.வினோத் அவரை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய்தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கரண்ஜோஹர் தயாரிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஜனவரி 1ம் தேதி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த ஜான்வி கபூர் தென்னிந்திய நடிகர்களில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தேவரகொண்டா என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜான்வி கபூர் தற்போது இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு நெட்பிளிக்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை உள்ளதால் அவர் விஜய் தேவர்கொண்டா படத்தின் படப்பிடிப்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்