சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான்.
ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம்.