ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜெயம் ரவி

வியாழன், 25 ஜனவரி 2018 (17:11 IST)
‘ரசிகர்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயம் ரவி.

 
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, நாளை இந்தப் படம் ரிலீஸாவதாக இருந்தது. படமும் சென்சார் செய்யப்பட்டு, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டனர். ஆனால், என்ன காரணத்தினாலோ நாளை படம் ரிலீஸாகவில்லை.
 
இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவி, “இந்த குடியரசு தினத்துக்கு ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸாகவில்லை. புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம். என் பக்கம் நிற்பதற்காக என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து தாருங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்