ரவி மோகன் என்ற பெயர் மாற்றப்பட்ட நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோவில் சட்டமன்றத்தில் ஜெயம் ரவி ஆவேசமாக பேசும் காட்சி இருப்பதை அடுத்து, இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில், டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில், இந்த படத்தின் டைட்டில் "கராத்தே பாபு" என்றழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கேரக்டரில் நாசர், எதிர்க்கட்சித் தலைவர் கேரக்டரில் கே.எஸ். ரவிக்குமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த வீடியோவில், பெயர் குறித்த நீண்ட விளக்கத்தை முதலமைச்சர் நாசர் விளக்கிய நிலையில், அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, "எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அதுதான் கராத்தே மணி" என்று ஆவேசமாக கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை கொஞ்சம் வித்தியாசமாக ஜெயம் ரவி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.