எம்ஜிஆரின் அனிமேஷன் படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு'' படத்தின் ஹீரோயின் அறிவிப்பு

சனி, 24 பிப்ரவரி 2018 (21:56 IST)
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் அடுத்த பாகமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தை எம்ஜிஆர், உயிருடன் இருக்கும்போதே நடித்து இயக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகிவிட்டதால் அவரது கனவு நனவாகாமலேயே போய்விட்டது.

இந்த நிலையில் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவருமான ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷ், எம்ஜிஆரின் நிறைவேறாத கனவை தற்போது நிறைவேற்றவுள்ளார்.

ஆம், 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படம் முழுக்க முழுக்க அனிமேஷனில் தயாராகவுள்ளது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்கவுள்ளார். மேலும் நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்பட பல பழம்பெரும் நடிகர்கள் அனிமேஷனில் நடிக்கவுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியாகும் என்று ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்